deepak
deepak

Sunday, October 12, 2014

தீபாவளி என்றால் என்ன?

தீபாவளி என்றால் என்ன?


தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.

தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.

அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல. 


கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.

நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.

Friday, October 10, 2014

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. 

அதாவது, 

முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும், ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம் வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார். 

பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான் ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.

ஆசிரமத்துக்கு வந்த அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள். பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகி தரிசனம் தந்தார். 

இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். உடனே வரத்தை அளித்து, சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார். அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.  அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் செளகரிய ப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட் களோ, 3 நாட்களோ அல்லது ஐப் பசி அமாவாசையான தீபாவளிய ன்று கேதாரகெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெரு மானை வழிபடவேண்டும். ஆண்க ளும் இவ்விரதத்தை அனுஷ்டிக் கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத் திற்கு முன்னர் “பாரணம்” பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜெபித்து, அர்த்தநாரீஸ்”வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.
அதாவது அம்மியையுங் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்குமம், சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்தி மாலையிட்டு புஷ்பஞ்சார்த்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர் கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து, காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து, முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, பழுப்பு, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக் கயிறு (21 இலை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாத மாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை கேதாரீஸ்வரரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷ தையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து தூப தீபம் காட்டி நைவேத்தியம தாம்பூலம சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
பூஜையின்போது அந்தணரைக் கொண்டு கேதார கெளரி விரதக் கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.
விரதபலன்:
இவ்வாறு சிரத்தையுடன் தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணி நீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் பெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணமாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரதத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.
இவ் விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவ உண்மை.

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

கேதார கௌரி விரத கதை பாட்டு வடிவில்..

காப்பு ஆதி பரமேஸ்வரியே ஆண்டவனைப் பூசித்துப் பாதியிடம் பெற்ற பரிசு தனை- நீதியுடன் சொன்னவர்கள் கேட்டவர்கள் சோர்வின்றி நோற்றவர்கள் துன்னுவரே பல்வளனும் தோய்ந்து

நூல் வெள்ளியங்கிரியென விளங்கு கைலையில் உள்ளந்தோறும் உறையும் ஒருவன் உமையொரு பாகனாய் உன்னதரேத்த இமையா முக்கண் திகழ் இறையவனாய் புன்னகை பொங்கும் திருமுகம் பொலிய வன்மையுடனே விளங்கிடும் பொழுதில் விண்ணக அழகியரில் வியன் புகழுடையாள் கண்கள் வியக்கும் கவினுடை ரம்பை பண்ணுடை இசைக்குப் பரதம் பயின்றாள்

பிருங்கி என்னும் பெருந்தவ முனிவனும் கருத்தை மயக்கும் இந்நாட்டியம் கண்டு விருப்பம் மிகுந்த விகடநடனத்தால் கருணைக் கௌரிகாந்தனைப் போற்ற அண்ணலும் பிருங்கியை அனுக்கிரகிக்க பண்ணும் சிவநெறிப் பிருங்கிப் பித்தர் மண் சுமந்திட்ட கடவுளை மட்டும் சுற்றி வந்தே சம்போ மகாதேவவென்று பற்றுதலுடனே பன் முறை போற்றி வற்றாக்கருணை உமையை வணங்கா உற்ற திடமுடன் நிலவுலகு மீள முற்றும் துறந்த பிருங்கியாம் முனிவன் சற்றும் தன்னை மதியாமை கண்டு சக்தி தரும் சங்கரி மிகக்கோபித்து தக்க தண்டனை தருவோம் யாமென துக்கமுண்டாக அவன் சரீரத்திலங்கு சக்தியெல்லாம் நீங்கவே சபித்தாள்

நண்டொடு பன்றிக்கும் நல்லருள் சுரக்கும் அண்ணலோ பிருங்கியின் அவலம் கண்டு தண்டமொன்றை அவன் தாங்க அளித்து பெண்ணுடை செயற்கு எதிர் செயலாக திண்மை கொடுத்திட தீரனாம் முனிவனும் அட்டகாசனாய் விகடமாய் ஆடி நட்டம் பயில் நாதனைப் போற்றிட எட்டுத்திசையும் ஏத்தும் அம்மை வெட்கம் மிகுந்து வேதனை கொண்டு கைலையை விட்டு காசினிபுகுந்து கானகம் தோறும் சுழன்று திரிந்து அலையும் மனதை அடக்கியகௌதமன் நிலையிலா இன்பம் நாடா முனிவனகத்து கலை நிறை பூங்காவின் மரமொன்றிலே இலை மறை காயாய் இனிதுறைந்திட்டாள்

மாரி குன்றி மலரெல்லாம் வாடி சீரியல் சிதறி செந்நெறி மறைந்து பாரிலே பாலைவனம் எனக்கிடந்த பேரியல் அவ்வனம் பெரிதும் மலர்ந்து கூர்விழி கொண்ட கௌரி மீனாளுற்ற பேருவகையாலே பொலிவுறச் சிறந்து அந்தணர் மகிழ ஆவினம் சிறக்க சுந்தர மலர்கள் சுகந்தம் பரப்ப சந்ததம் குளிர்ந்த சந்தோஷம் தெரிந்து தந்தை போலும் கௌதம மறையோன் முந்தைப் பிணக்கால் மாதிரிபுரசுந்தரி வந்த தன்மை உணர்ந்தே வணங்கிப் பந்தமுறவே பாங்குறப் போற்றினன்

அர்த்த நாரியாய் அரனார் உடலில் பர்த்தா பத்தினி பேதம் ஒளிய இருவர் என்னும் இயல்பு இல்லாமல் ஒருவர் என்னும் உயர்வே ஓங்க கிருபை பொலியும் காட்சியே தோன்றும் அருளைப் பெறும் வகை அருள்கநீரே என்று அம்மை வேண்ட அம்மாமுனிவனும் தன் புண்ணியப்பயன் போலுமிதுவென கன்னல் மொழியன் கௌதமன் மகிழ்ந்து பன்முறை போற்றி கேதாரகௌரியென்ற வன்மை நிறை விரத முறைமையை அம்மைக்குச் சொல்ல அவளும் மகிழ்ந்து எம்பிரானை நோக்கி நோன்பு முயன்றாள்

புரட்டாதித் திங்கள் புகழ் அமாவாசை இரவு கழிந்த ஈரைந்தாம் நாளாம் வரம் மிகத்தரு விஜயதசமி தொட்டு இருபத்தொரு நாள் இறைவனை நோக்கி கருணை மிக்க காமவல்லி நோற்று வரும் சதுர்த்தசியில் வாழ்வு சிறக்க இருபத்தொரு முடிச்சுஇட்ட காப்பிழை கரத்தில் அணிந்தாள் காரிகையாளே

மான்மழு ஏந்திய மாநாற் கரத்தராய் வான் மண் ஏத்திட வெள்விடையேறி தேன்நிறை கூந்தல் தேவி முன்பு கோன் என மணவாளக்கடவுள் தோன்றி நோன்பினை ஏற்றோம் நொந்தனையோ என்றே வினவி எம்மன்னை கௌரியை தன்னோடு அணைத்தே தந்தோம் இடம் என்று இனிய மொழிபேசி நடமிடு நாயகர் உருவம் மாறினன்

அப்பனும் அம்மையும் ஆங்கே இணைந்து இப்புவி ஏத்த அர்த்தநாரீசனாய்
இலங்கு செப்பருவடிவம் கொண்டனர்; அதனை தப்பிலாப் பிருங்கியொடு கௌதமர் விண்ணகத்தர் மண்ணவர் யாவரும் கண்களி கூரமகிழ்ந்தே போற்றினர்

எம்மை நோக்கி இவ்விரதத்தை முறையாய் இம்மையில் நோற்பவர் இன்பமெல்லாம் பெறுவர் நம்புமின் இதைஎன்றே நாயகஅர்த்தநாரீசர் மொழிந்தே அருளினர் போற்றினர் யாவரும்

அன்று தொட்டே ஆடவர் மங்கையர் என்னும் யாவரும் ஏற்றம் பொங்க மண்ணுலகத்தில் மணவாழ்வு உண்டாக பண்ணும் செயல்கள் பலிதமுண்டாக செல்வம் ஓங்க சீர்மைகள் பொலிய பல்வகை இன்பமுடன் பரகதிகிட்ட கேதாரகௌரியுடன் கடவுளைப் போற்றி தீதில் நோன்பு நோற்றுச் சிறந்தார்

எழுதியவர்- நீர்வை.தி.மயூரகிரிசர்மா

விரதபலன்

விரதபலன்

தம்பதிகள் சேமமாக இருத்தலும் பிணிநீங்கலும் வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் உகந்தது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்

பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை

பூலோகத்தில் இவ்விரதம் பரவிய முறை


சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர்
இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்ர்வராஜனுக்கு கூறியருளினார். விரத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். மிகவும் வறுமையினால் வாடிய இவ்விரத்த்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
அனைவருக்கும் வணக்கம். இந்த விரதம் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் இங்கு ஆவணிமாதம் வளர்லிறை நவமியில் ஆரம்பித்து புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு முன்தினம்வரை 21 நாட்கள் நடைபெறுகிறது. வாய்ப்பு உள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவேண்டுகிறேன். Ganesan Pondicherry

இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள்

இவ்விரத்தை அனுஷ்டிக்கக் கூடியவர்கள்


ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள் விரதமிருக்கலாம். ஏனையோர் மாதவிலக்கு அம்முறை வந்தபின் அமாவாசைத் திதிக்கு முன்னுள்ள 9 நாட்களோ 7 நாட்களோ மூன்று நாட்களோ அல்லது அன்றைய தினமோ இவ் விரத்த்தை அனுஷ்டித்து 21 முடிச்சிட்ட கயிற்றை இடது புஜத்திலோ அல்லது மணிக்கட்டிலோ கட்டிக் கொள்ளலாம். கேதாரகௌரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபடவேண்டும். ஆண்களும் இவ்விரத்தை அனுஷ்ட்க்கலாம்.

கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை

கேதாரேஸ்வர விரதம் அனுஷ்டிக்கும் முறை

ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு
முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும். தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து பூக்கள் வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்ய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் சோடோபோசார பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும். இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நூலினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.ேகதுகர்ிகஸவப

கேதாரகௌரி விரதம்

கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தெவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது.
முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன்பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பியைத் தவிர்த்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌதமுனிவரின் ஆச்சிரமத்திற்கு புறப்பட்டார். அம்பிகை வரவினால் ஆச்சிரமும் சூழலும் புதுப்பொலிவுடன் விழங்கியது. ஓமத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வீடுதிரும்பிய மாபெரும் தவஸ்தியான கௌதம முனிவர் தமது ஆச்சிரமம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து அவளை அர்ச்சித்து பூஜை செய்து செய்துவிட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைகுக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும்போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து எமக்கு அருள் புரிகின்றாள். இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவனின் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார்.

தீப ஒளித்திருநாள் தீபாவளி

தீப ஒளித்திருநாள் தீபாவளி

தீபாவளி (சமக்கிருதம்: दीपावली அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும்
.

இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

பெயர்க் காரணம்
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தோற்ற மரபு


இந்துக்களின் தீபாவளி
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.

சீக்கியர்களின் தீபாவளி
1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.



சமணர்களின் தீபாவளி
மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி பட்டாசு
படிமம்:ராக்கெட்.ogv
சீறிப் பாயும் ராக்கெட் வெடி
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

பிற நாடுகளில் தீபாவளி

மேற்குநாடுகளில் தீபாவளி



மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.